யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில், மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் விரைவில் முடிவுக்குவரும் என்று யாழ்ப்பாணம் போதனா பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
போராட்டத்தை மேற்கொண்டுவரும் தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.