இலங்கையில் நேற்றைய தினம் (14) நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்லது.
இதுவரை வெளியான முடிவுகளின் படி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்கான 6 ஆசனங்களில் 3 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இது வரலாற்றில் முதல் தடவை என்பதோடு தமிழர் தரப்பு அல்லாமல் ஆசனக்கள் வெளியே போனமையானதும் இதுவே முதல் தடவையாகும்.
மீதமுள்ள 3 ஆசனக்களிலும் இலங்கை தமிழரசு கட்சி 1 ஆசனத்தையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 ஆசனத்தையும், 1 ஆசனத்தை வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தலைமையிலான சுயேட்சை குழு 17 ம் கைப்பற்றியுள்ளது.
இதேவேளை, இம் முறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான epdp கட்சி, அங்கயன் இராமநாதன் தலைமையிலான ஜனனாயக தேசிய கூட்டணி, செல்வம் அடைக்கல நாதன், சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரின் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் படு தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.