இலங்கை வரலாற்றிலேயே முதற்தடவையாக உடல் அவயவங்களை இழந்தவர்களுக்கு பிரத்தியேகமான சிறப்பு வாகன அனுமதிப்பத்திரமும், சாரதி அனுமதி பத்திரமும் அறிமுகம் செய்யப்பட்டு பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் நேற்று(06) இந்த நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள யாழ்மாவட்ட அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.




