மோடியை சந்தித்த தமிழர் அரசியல் கட்சியினர்:

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பை தமிழ் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் சற்று முன்னர் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதில் சி.வி.கே.சிவஞானம், சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சித்தார்த்தன், சாணக்கியன், சுமந்திரன்,ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்தச் சந்திப்பு குறித்து இந்தியப் பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும். 

பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான திரு இரா. சம்பந்தன் மற்றும் திரு மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவித்தேன். அவர்கள் இருவருமே தனிப்பட்ட ரீதியில் எனக்கு தெரிந்தவர்கள். 

அத்துடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இச்சந்திப்பின்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. 

எனது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் அவர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *