மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 820 ஆக அதிகரித்துள்ளதுடன் 672 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்றிரவு 11.11 மணிக்கு குறித்த நிலநடுக்கம் 6 தசம் 8 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அட்லஸ் மலைத்தொடரில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு செல்வதில் பெரும் சிரமங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக பழைய கட்டிடங்களால் ஆன கிராமங்களுக்கு மீட்புப் படையினர் செல்ல சில நாட்கள் ஆகலாம் எனவும் கூறப்படுகிறது.
நாட்டின் மூன்றில் ஒரு பகுதியைத் தாக்கியதாகக் கூறப்படும் இந்த நிலநடுக்கம் மாரகேஷக்கு தென்மேற்கு பகுதியில் 18.5 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதுடன், குறித்த நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் தேசமடைந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடரும் அதேவேளை, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.