மயிலத்தமடு மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதி வழங்க கோரி பாராளுமன்றில் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார்.
இன்று வெள்ளிக்கிழமை (6) காலை பாராளுமன்றம் கூடிய போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டார்.
இதன் பின்னர் வேண்டும் வேண்டும் எமது நிலம் எமக்கு வேண்டும், அழிக்காதே அழிக்காதே தமிழர்களின் நிலங்களை அழிக்காதே என்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகளை கைலேந்திந்தி பாராளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.