மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி அவர்களுக்கு லண்டனில் நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வு:

பிபிசி தமிழோசை வாயிலாக உலகெங்கும் ஓங்கி ஒலித்து தமிழர் மனங்களில் குடிகொண்ட திருமதி. ஆனந்தி சூரியபிரகாசம் அவர்களுக்கான நினைவஞ்சலி கூட்டம் ஒன்று பிரித்தானியாவில் நேற்றைய தினம் நடைபெற்ரது.

சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் னடைபெற்ற குறித்த நிகழ்வு வடமேற்கு லண்டன், றைஸிலிப் பகுதியில் அமைந்துள்ள “கிராண்ட் வியூ மண்டபத்தில்” னேற்று மாலை 4:30 ற்கு ஆர்ம்பமாகி மாலை8:30 வரை இடம்பெற்றது.

நிகழ்வை சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் இயக்குனர்களில் ஒருவரும், ஊடகவியலாளருமான திரு.கோபி இரத்தினம் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

முதலில் பொதுச்சுடரினை சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினரும், ஊடகவியலாளருமான “விஜய்” அவர்கள் ஏற்ரி வைக்க ஊடகவியலாளர் திருமதி. ஆனந்தி சோரியபிரகாசம் அவர்களின் திருவுருவப்படத்திற்கான மலர்மாலையை ஊடகவியலாளர் திருமதி றஜித்தா பிரதீபன் அவர்கள் அணிவித்தார். தொடர்ந்து 2 நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதைனைத் தொடர்ந்து நிகழ்வை மூத்த ஊடகவியலாளர் திரு.இளையதம்பி தயானந்தா அவர்கள் தலமையேற்று நடாத்தினார். மண்டபம் நிறைந்த மக்களின் மலர் அஞ்சலியும், நினைவுரைகளும் இடம்பெற்றதோடு, இலங்கை, இந்தியா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வழங்கப்பட்ட காணொளிப்பதிவு ஊடான நினைவுரைகள் அகன்ற திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

வி.என்.மதியழகன் (இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் இயக்குனர்), B.H.Abdul Hameed (இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் சிரேஸ்ர ஒலிபரப்பாளர), திரு. இரத்தினம் கந்தசாமி (சிரேஸ்ட ஊடகவியலாளர் – பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி -பிரான்ஸ்) Mr.Bhagwan Singh (Former Executive Editor, Deccan Chronicle, India), Ms.Mamta Gupta (Producer, Hindi Service – BBC World Service), Ms.Narayani Ganesh (Associate Editor, The Times of India, Editor – The Speaking Tree Newspaper, India), சீமான் ( நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் – இந்தியா) போன்றோர்களின் உரைகள் காணொளி வடிவில் அகன்ற திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அத்தோடு திரு.பிறேம் சிவகுரு, திரு. S.K.றாஜன், திரு.மாலி, சிவாந்தி, சாம் பிரதீபன், திரு. அனஸ், திரு. நடா மோகன், திரு. றாம் றாஜ், உட்பட்ட பல ஊடகர்களும், டொக்டர். புவி -(தென்மராட்சி அபிவிருந்தி சங்கம்), திரு.றாஜகோபால் – பிரித்தானிய தமிழர் பேரவை) ஆகியோர் உட்பட பலர் உரைகளை வழங்கினர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறையினரால் வெளியிடப்பட்ட இரங்கல் உரையை திரு.சங்கீதன் அவர்கள் வாசித்தார். இறுதியாக நன்றி உரையினை சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினரும், ஊடகருமான திரு.யோகரட்ணம் அவர்கள் வழங்கியதை அடுத்து நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *