மூத்த தமிழ் ஊடகவியலாளரும், பிபிசி தமிழோசையின் தயாரிப்பாளராக கடமையாற்றியவருமான திருமதி. ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் நேற்று இரவு சுகஜீனம் காரணமாக பிரித்தானியாவில் காலமானார்.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை சொந்த இடமாக கொண்ட திருமதி. ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் ஆரம்பத்தில் இலங்கை வானிலியில் அறிவிப்பாளராகவும், னாடக கலைஞ்ஞராகவும் பணியாற்றியிருந்தார்.
அதன் பின்னர் இலங்கையை விட்டு வெளியேறி பிரித்தானியா வந்தடைந்த பின்னர் 1970 களில் இருந்து 1980 வரை பிபிசி தமிழோசையில் பகுதி நேர அறிவிப்பாளராக கடமையாற்றிய அவர் 1980 முதல் 2005 ஆம் ஆண்டுவரை பிபிசி தமிழோசையில் நிரந்தர அறிவிப்பாளராக கடமையாற்றிய காலத்தில் பல முக்கிய நேர்காணல்களையும் செய்து பிரபலமானார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனையும் இரண்டு முறை நேர்காணல் செய்த பெருமைக்குரியவர்.
2005 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் ஓய்வு பெற்ற திருமதி. ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் அதன் பின்னர் தனது ஊடக பணியின் தொடர்ச்சியாக மறைந்த மூத்த ஊடகவியலாளர் திரு. தம்பிப்பிள்லை குகதாசன் (குகன்) அவர்களின் எண்ணக்கருவில் உதித்த சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தை ஐக்கிய இராட்சியத்தை தளமாக கொண்டு குகதாசன், கந்தசாமி, கோபிரட்ணம் ஆகியோரோடு இணைந்து 2006 இல் உருவாக்கிய அவர் அன்று முதல் தனது இறுதி நிமிடம் வரை அதன் தலைவியாகவும் செயலாற்றி வந்தவராவார்.
கடந்த சில வருடங்களாக வயது முதிர்வு, மற்றும் நோய் காரணமாக உடல் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த சில வாரங்களாக உடல் நிலை மோசமடைந்த நிலையில் நேற்று St.Helier மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அன்னாரின் பிரிவு தமிழ் ஊடகப்பரப்பிற்கு பெருந்துயர் மட்டுமன்றி பேரிழப்பாகும். இத் தருணத்தில் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்களை தெரிவிக்கும் அதேவேளை அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.


அனாரின் இறுதிச்சடங்கு தொடர்பான விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.