இங்கிலாந்தின் மிக முக்கியமான மற்றும் பெரிய விமான நிலையமான ஹீத்ரோ விமான நிலையத்தை இன்று (21) முழு நாளும் மூடுவதற்கு அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
விமான நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் மேற்கு லண்டனின் ஹேஸ் பகுதியில் உள்ள மின்சார உபநிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தால் விமான நிலையத்தில் கடுமையான மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த அவசர தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஹீத்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது, தீயை அணைப்பதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 70 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன் விளைவாக, ஹீத்ரோ விமான நிலையத்தில் இன்று அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 16,300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரத் தடையை ஏற்படுத்தியுள்ளது.