மாவீரர் நாளான நேற்றைய (27) தினம், பிரித்தானியத் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள “ஈகைப் பேரொளி” முருகதாசன் மற்றும் தியாகிகள் நினைவுக் கல்லறையில் மக்கள் கூடி மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பொதுச் சுடரினை “ஈகைப் பேரொளி” முருகதாசனின் தந்தையான திரு.வர்ணகுலசிங்கம் அவர்கள் ஏற்றிவைக்க, மலர் மாலையினை நாம் தமிழர் கட்சியின் பிரித்தானியக் கிளை பொறுப்பாளர் திரு.சிவகுமார் அவர்கள் அணிவித்தார்.
முருகதாசனுக்கான ஈகைச் சுடரினை திரு.நிமலன் அவர்கள் ஏற்றிவைக்க, தியாகிகளுக்கான ஈகைச் சுடரினை திரு.கேதீஸ் அவர்கள் ஏற்றிவைத்தார்.
மலர் வணக்கத்தினை திருமதி.சுமதி அவர்கள் ஆரம்பித்துவைத்ததை தொடர்ந்து மக்கள் மாவீரர்களை நினைந்து மலர்தூவி விழக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.