ஆயுதப்படைகளை விட்டு வெளியேறி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட சுமார் 1,700 பேரை கடந்த இரண்டு மாதங்களில் கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அதேவேளை, சமூகத்தில் புழக்கத்தில் இருந்த 1,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
படையினர் மற்றும் காவல்துறையின் சில உறுப்பினர்கள் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்ட மற்றும் ஈடுபட்டுவரும் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விசாரணைகள் நடந்து வருவதாகவும், பாதாள உலக குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணிய பல காவல்துறை அதிகாரிகள் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.