கிரேக்க தீவு ஒன்றில் மாயமான தொலைக்காட்சிப் புகழ் மருத்துவர் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை முதல் தேடபப்ட்டு வந்த நிலையில், கிரேக்க மக்களால் படுகுழி என அடையாளப்படுத்தப்படும் மிக ஆபத்தான பகுதியில் மருத்துவர் மைக்கேல் மோஸ்லியின் சடலம் மீட்கபட்டுள்ளது.
சம்பவத்தன்று கொளுத்தும் வெயிலில் குடையுடன் கடற்கரையில் உலாவ சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் சுமார் 7.30 மணியளவில் மைக்கேல் மோஸ்லியின் மனைவி Dr Clare Bailey உள்ளூர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தமது கணவர் கடற்கரைக்கு சென்ற நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தொடர் தீவிர தேடுதல் நடவடிக்கையின் முடிவில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது உடலை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது. உள்ளூர் பொலிசார் தெரிவிக்கையில், St Nicholas கடற்கரையில் உலாவ சென்று மாயமான பிரித்தானிய மருத்துவரின் சடலமாக இருக்கவே வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
பாறைகள் நிறைந்த கடற்கரைக்கு அருகில் உள்ள வேலிக்குப் பின்னால் ஒரு மதுக்கடைக்காரனால் முதலில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 67 வயதான மருத்துவர் மைக்கேல் மோஸ்லி கடைசியாக புதன்கிழமை மதியம் 2 மணிக்கு குடையுடன் காணப்பட்டது கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்தது.
அவர் ஆபத்தான பாறைகள் மிகுந்த பகுதி நோக்கி நகர்வதும் அதில் பதிவாகியிருந்தது. இந்த நிலையில் 5 நாட்களுக்கு பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கொல்கத்தா நகரத்தில் பிறந்தவர் மைக்கேல் மோஸ்லி, பிரித்தானிய மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். உணவு முறைகள், குறைந்த கார்போஹைட்ரேட் உணவு போன்ற முறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் காரணமாக அவர் மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.