அண்மையில் மறைந்த மூத்த அரசியல் தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான மாவை சேனாதிராஜா அவர்களின் 31ஆம் நாள் நினைவை முன்னிட்டு பிரித்தானியாவில் நினைவு வணக்க நிகழ்வு னடைபெற உள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் ஐக்கிய இராட்சிய கிளையின் ஏற்பாட்டில் னடைபெற உள்ள இந் நிகழ்வு 171 Uxbridge road, Hatch End, HA5 4EA எனும் முகவரியில் உள்ள Harrow Arts Centre மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
எதிர்வரும் 28-02-2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:30 ம்தல் இரவு 9:00 மணி வரை நடைபெற உள்ள இந் நிகழ்வில் அனைவரையும் வந்து கலந்துகொண்டு அமரர். மாவை சேனாதிராஜா அவர்களுக்கு அஞ்சலிகளை செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
