இலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் மக்களின் காணிகளை விடுவிப்பதுடன் புதிதாக காணிகளை கைவசப்படுத்துவதையும் நிறுத்தவேண்டும் என என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கையில்…..
இலங்கை இராணுவம் தன் வசம் வைத்திருக்கும் மக்களின் காணிகளை விடுவித்தல், வடக்கு,கிழக்கில் புதிதாக காணிகளை கைவசப்படுத்தலை நிறுத்துதல், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரைம் விடுதல செய்தல், பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நினைவேந்தல் முயற்சிகளில் ஈடுபடுவதையும் குற்றச்செயல்களில் இருந்து நீக்குவதோடு அவற்றுக்கு ஆதரவளித்தல் போன்ற நம்பிக்கையை கட்டியெழுப்பும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நிலைமாற்றுக்கால நீதிக்கான சூழலை உருவாக்கவேண்டும். என வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது.