அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் மகிழுந்துகள் மற்றும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களுக்கு 25 சதவீத புதிய வரியை அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த புதிய வரிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வருமெனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் அமெரிக்காவின் புதிய நடவடிக்கை உலகளாவிய வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என பொருளியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.