போலி ஆவணங்களை தயாரித்து அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்ற போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்காக அவரது வீட்டிற்குச் சென்ற வேளை குறித்த வீட்டினுள் பிரசன்ன ரணவீரவின் மனைவியும் ஏனைய குடும்பத்தினரும் மாத்திரமே இருந்ததாக அங்கு சென்ற குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார்.
அதனால், பிரசன்ன ரணவீரவின் மனைவி மற்றும் சாரதியிடம் இருந்து தாம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாகவும், தாம் வருவது அறிந்து பிரசன்ன ரணவீர அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.