சீதுவ – கிடிகொட பெல்லானவத்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (22) இரவு நடைபெற்ற பேஸ்புக் விருந்து சுற்றி வளைக்கப்பட்டு, 76 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் கைது செய்யப்பட 76 பேரில், 15 பேர் பெண்கள் எனவும், அதில் 12 சிறுமிகள் உள்ளடக்கியிருப்பதாகவும் எஞ்சியோரில் 47 இளைஞர்களும் உள்ளடங்கியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.