43 கோடி 64 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா தொகையுடன் பிரித்தானியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (26) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
21 வயதுடைய பிரித்தானியப் பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சந்தேக நபர் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து இன்று (26) காலை 09.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பின்னர், சந்தேக நபர் விமான நிலையத்தின் அனைத்து சோதனை நடவடிக்கைகளையும் முடித்துவிட்டு பச்சை வழித்தடம் (Green Channel) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது மீண்டும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 43 கிலோ 648 கிராம் கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.