அநுராதபுரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண் வைத்தியருக்கு நீதி கோரியும், அவருக்கெதிராக இடம்பெற்ற குற்றச் செயலை கண்டித்தும் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டம் நடத்திய வைத்தியர்கள் கறுப்புப் பட்டி அணிந்தும், பதாதைகளை ஏந்தியும், பாலியல் குற்றத்துக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.