பிரித்தானியாவில் நடைபெற்ற மாவை சேனாதிராஜாவின் 31ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு:

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் மாவை சேனாதிராஜா அவர்களின் 31ம் நாள் நினைவுகூரும் உணர்வுபூர்வமான நிகழ்வு நேற்று பிரித்தானியாவில் நடைபெற்றது.

தமிழ் சமூகத்திற்காகப் பெரும் தியாகங்களைச் செய்த இவர் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் முக்கிய மிதவாத அரசியல் தலைவராக விளங்கிய மாவை சேனாதிராஜாவின் நினைவு நிகழ்வில் இங்கிலாந்தில் வசிக்கும் தமிழ் சமூகத்தினர் திரளாக கலந்து கொண்டு அவரின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

தமிழ் அரசுக் கட்சியின் பிரித்தானிய கிளையினரால் அதன் தலைவர் சொ.கேதீஸ்வரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் Harrow Arts Center 28 பெப்ரவரி 2025, அன்று மாலை 7:00 மணிமுதல் 9:00 மணி வரை நடந்தேறிய இந்நிகழ்வில் தலைமை உரையை தியாகராஜா திபாகரன் வழங்கினார்.

இந்நிகழ்வை சிறப்பிக்க வருகை தந்தவர்களான harrow west Conservative Party Councillor குகா குமரன் நினைவுப்பேருரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து Wembley Central Labour Party Councillor ராஜன் சீலன் நினைவுரை ஆற்றினார்.

தொடர்ந்து உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் பிரித்தானியாவுக்கான தலைவர் சட்டத்தரணி அமுது இளஞ்செழியன் அமரர் மாவை சேனாதிராஜா அவர்கள் தமிழ்ச்சமூகத்தின் அரசியல் விடுலைக்கான பங்களிப்பினை நினைவுகூர்ந்தார்.

தொடர்ந்து பிரித்தானிய மண்ணில் தமிழ் சமூகத்திற்காக சேவை ஆற்றும் சொ.ஜோகலிங்கம், அ.இராஜலிங்கம், திருமலை பாலா ஆகியோர் நினைவுரைகளை ஆற்றினர்.

நிகழ்வின் முக்கியமான பகுதியாக, மாவை சேனாதிராஜாவின் விடுதலைப் போராட்ட வாழ்க்கை மீதான அனுபவங்களும் அவரின் தியாகங்களும் பேசப்பட்டன. தமிழ் சமூகத்தின் மேம்பாட்டிற்காக அவர் அன்றைய காலத்தில் செய்த தியாகங்கள் அளப்பரியது. அவை இன்றும் மக்களது மனங்களில் நிலைத்திருக்கின்றன. அரசியல் உரிமைக்கான போராட்டத்திற்கு இளைஞர்களை அணிதிரட்டியதில் அவருக்கு ஒரு பங்கும் பாத்திரமும் உண்டு என்பதை பலரும் நினைவு கூர்ந்தனர். இந்நிகழ்வு நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *