வவுனியா பாவற்குளம் அலைகரைப்பகுதியில், குருதிக் கறைகளுடன் குளத்திலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா விநாயகபுரத்தை சேர்ந்த கோபிதாசன் (வயது 33) என்று பொலிஸார் தமது முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர் கடந்த 14ஆம் திகதிமுதல் காணாமற் போயிருந்த நிலையில், அவரைப் பல்வேறு இடங்களிலும் தேடி வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.