மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கத்தை நடத்திய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அனுமதி பெறாமல் கையெழுத்து போராட்டம் நடாத்தியமையாலும், தடுத்த பொலிஸாரோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டதை அடுத்து பொலிஸார் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட அங்கிருந்த பாஜகவினரை கைது செய்தனர்.
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் தமிழகத்திற்கு தரவேண்டிய கல்வி நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்த நிலையில், அவரின் இந்த பேச்சுக்கு பாஜக தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.