பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் – இணுவிலை சேர்ந்த இளைஞனை பிணையில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
மாவீரர் நாள் தொடர்பிலும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படங்களை தனது முகநூலில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இணுவிலை சேர்ந்த இளைஞனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் , பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்திருந்தனர்.
கைது செய்த இளைஞனை யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் சுமார் 72 மணித்தியால விசாரணைகளின் பின்னர், ஞாயிற்றுக்கிழமை மன்றில் முற்படுத்திய நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் மன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, குறித்த நபரை 2 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, பயண தடையும் விதித்ததுள்ளது.