திருகோணமலை – மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் கிராமத்தில் 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி அன்று ஶ்ரீலங்கா இராணுவத்தினரால் 17 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
அதில் மூன்று கைக்குழந்தைகளும் பாடசாலை மாணவ, மாணவிகளும் அடங்குவர்.
தாக்குதல் நடந்த வீட்டிலிருந்து கோணன் உலகநாதன் மற்றும் மேரி கணேசபிள்ளை ஆகியோர் மட்டுமே உயிர் தப்பியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றுடன் 37வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் இதுவரை பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு எவ்வித நீதியும், நிவாரணங்களும் கிடைக்கபெறவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.