முன்னர் நிராகரிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான 35 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டது.
அதன்படி, வேட்புமனுக்களை ஏற்க சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம், உள்ளூராட்சித் தேர்தலுக்கான 37 வேட்புமனுக்களை ஏற்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.