கொழும்பு – கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணைகளில் இருந்து விலகுவதாக கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுல திலகரத்ன இன்று வியாழக்கிழமை (27) தெரிவித்துள்ளார்.
சனத் பாலசூரிய மற்றும் போத்தல ஜயந்த ஆகியோரின் முகநூல் பக்கத்தில் தன்னை பற்றி பதிவிட்டிருந்த கருத்துக்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுல திலகரத்ன திறந்த நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
கிரிஷ் கட்டிடம் தொடர்பான வழக்கு விசாரணைகளில் கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுல திலகரத்ன ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.