நவம்பர் 18 இன் பின் பிரித்தானியாவை தாக்கவுள்ள கடும் குளிர்!

பிரித்தானியாவில் நவம்பர் 18-ஆம் திகதி முதல் -5°C வரை குறைந்த வெப்பநிலைகளுடன் கடுமையான குளிரான காலநிலை நிலவும் என புதிய வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்காண்டினேவியாவிலிருந்து 700 மைல் பரப்பளவில் பனிப்புயல் பிரித்தானியாவை தாக்கக் கூடும் என WXCharts வரைபடம் சுட்டிக்காட்டுகிறதாம்.

ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தில் ஆழமான நீல மற்றும் ஊதா நிறங்கள் வரைபடத்தில் தெரிகின்றன.

இதன் மூலம், அந்த பகுதிகளில் கடுமையான பனி மற்றும் குறைந்த வெப்பநிலைகள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TheWeatherOutlook வழங்கிய மற்றொரு தகவலின்படி, நவம்பர் 24-ஆம் திகதிக்குள் சில பகுதிகளில் 25 செ.மீ. வரை பனி பொழியலாம் என கூறப்பட்டுள்ளது.

ஆனால், Met Office அளித்த முன்னறிவிப்பில், பனி தாக்கத்திற்கும் புயல் தாக்கத்திற்கும் சில வாய்ப்புகள் இருப்பினும், அது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *