யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச இன்று சனிக்கிழமை (31) காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
சஜித் பிரேமதாச இன்றையதினம் மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை (01) ஆகிய இரு நாட்களும் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்து பல்வேறு தரப்பினருடனும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.