எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சனிக்கிழமை (31) யாழ். நாகதீப ரஜ மகா விகாரைக்கு விஜயம் செய்து மத வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றுக் கொண்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காகவும், ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குமாக வேண்டியுமே இன்றைய வழிபாடு அமைந்திருந்தது.