எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கு தங்களது பிரதேசங்களில் உள்ள கிராம அலுவலகர் அல்லது தோட்ட கண்காணிப்பாளர் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.