ஜோகன்னஸ்பர்க்கில் வீடற்ற மக்கள் மற்றும் குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட அடுக்குமாடி கட்டிடத்தில் இரவு நேர தீ விபத்து ஏற்பட்டதில் குறைந்தது 74 பேர் இறந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் அவர்களில் 6 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐந்து மாடிகளை கொண்ட குடியிருப்பு தொகுதியொன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டு, கட்டிடம் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தீ பரவியுள்ள நிலையில் தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜோகன்னஸ்பர்க் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.