பொதுமக்களின் தகவலின் அடிப்படையில் இன்று (6) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலையடி பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலம் குறித்து அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன், அம்பாறை தடவியல் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தடவியல் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கரைப்பற்று அலிக்கம்பை பகுதியில் ஏரப்பன் ராமன் (69 வயது) என்பவர் காணாமல் போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர், காணாமல் போன தங்கள் உறவினர் என சம்பவ இடத்திற்கு சென்றவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.