துப்பாக்கிகள், கூரிய ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது!

இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய பகுதியில் பல துப்பாக்கிகள், கூரிய ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கொத்தலாவல சந்திக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

AK47 துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி, 7.62 துப்பாக்கியின் 25 தோட்டாக்கள், 09 மிமி துப்பாக்கியின் 07 தோட்டாக்கள், AK47 ஆயுதத்தின் மகசீன், இரண்டு வாள்கள் மற்றும் ஒரு கத்தி என்பன இதன்போது மீட்கப்படடன.

எம்பிலிப்பிட்டிய பகுதியில் வசிக்கும் 53 வயதுடைய சந்தேகநபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *