தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில், இன்று(06) ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 50வயதுடைய பொன்னுத்துரை சித்திரவேல் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இறந்தமைக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக தடயவியல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலதிக பொலிஸ் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.