ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் அரியநேத்திரன் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் இருவரும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி என்ன முடிவை எப்போது எடுத்தாலும் தனிப்பட்ட முறையில் எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும்.
கட்சி என்ன முடிவை எடுக்கிறதோ எடுக்கவில்லையோ அது எவ்வளவு தூரம் எம்மை தள்ளப்போகிறதோ என்பதை தமிழ் மக்கள் தீர்மானிப்பார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். தமிழ் மக்கள் காத்திரமான ஒரு செய்தியை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
தமிழரசுக் கட்சிக்குள் பெரும்பாலானோர் தமிழ் பொது வேட்பாளர் விடையத்தில் பெரிதாக குழப்பமில்லாமல் அதனை ஆதரித்தும் கருத்து தெரிவித்த போதும் அதனை முற்றாக நிராகரித்தும், அந்த முடிவினை தடுத்தும் வருவது எம்.ஏ.சுமந்திரனும், சாணக்கியனும் மட்டுமே என கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது பூரண ஆதரவை தமிழ் பொது வேட்பாளருக்கான பூரண ஆதரவை வெளியிட்டுள்ளமையானது கட்சி முடிஐ தாண்டி இவர் போல் ஏனைய உரூப்பினர்களும் தனிப்பட்ட முறையில் தங்கள் ஆதரவை விரைவில் வெளிப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.