தமிழரசின் தேசியப்பட்டியல் ஆசனம் ப.சத்தியலிங்கத்திற்காம்!

தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். 

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (17)  காலை இடம்பெற்றது.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற இக் இக்கூட்டத்தில், சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், குகதாசன், இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், த.கலையரசன் மற்றும் துரைராஜசிங்கம், குலநாயகம் செயலாளர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது கடந்த தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்த ஒரு தேசியபட்டியல் ஆசனத்தை வழங்கும் விடயம் தொடர்பாக நீண்ட விவாதங்கள் இடம்பெற்றன.

விவாதங்களின் பின்னர் குறித்த தேசியப்பட்டியல் ஆசனத்தை ஏற்கனவே வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த ப.சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு அரசியல் குழுவால் தீர்மானம் எடுக்கப்பட்டதாக யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன் சற்றுமுன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *