நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இந்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். கட்சியில் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை இணைக்க மும்முரமாக வேலைகள் நடந்து வருகிறது.
2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து தமிழக வெற்றிக் கழகம் பணியாற்றி வருகிறது.
இந்நிலையில், கட்சியின் புதிய செயலியை இந்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி இந்த வாரம் குறிப்பாக புதன் அல்லது வியாழக்கிழமையில் செயலியை அறிமுகம் செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இதற்கான செயலி மற்றும் பாஸ்வேர்ட் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மே மாதத்திற்குள் அதிக அளவு உறுப்பினர்களை சேர்க்கவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்புகள் வழங்க தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் பத்து நாட்களில் வெளியாகும் என்றும்,
மேலும், பொறுப்பாளர் நியமனத்திற்கு பிறகு உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலி அறிமுகம் செய்யப்படும் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.