ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
தபாலில் ஏற்படக்கூடிய தாமதம் மற்றும் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (05) நள்ளிரவு 12 மணியுடன் முடிவடையவிருந்த தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.