தடை உத்தரவை நீக்கியது மூதூர் நீதிமன்றம்!

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை வழங்குவதற்கு மூதூர் நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தடை உத்தரவை வியாழக்கிழமை நீக்கியுள்ளது என இவ் வழக்கில் எதிராளிகள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி சுகாஸ் கூறியுள்ளார் .

சேனையூர் பிள்ளையார் கோவிலில் வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியமைக்காக கைது செய்யப்பட்டிருந்தவர்களின் வழக்கு புதன்கிழமை விசேட நகர்த்தல் பத்திரம் மூலம் மூதூர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

” எதிராளிகள் சார்பில் முன்னிலையாகிய எனது வாதத்தை அடுத்து மூதூர் நீதிபதி தஸ்னீம் பெளசான் பானு இவ் தடை நீக்கல் தொடர்பான உத்தரவை விடுத்தார்.

சென்ற12 ம் திகதி இரவு கஞ்சி வழங்கியமை மூலம் நீதிமன்ற தடையுத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் ஒரு ஆணும்,மூன்று பெண்களும் சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் 13 ந் திகதி மூதூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இம்மாதம் 27 திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.கைது செய்யப்பட்டவர்கள் ஐ.சி.சி.பி. ஆர் . சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமையினால் புதன்கிழமை அவர்களுக்கான பிணை வழங்கப்படவில்லை ” என்றார் .

இந்த நிலையில் நேற்று மாலை திருகோணமலை நகரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *