விண்கலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக 9 மாதங்கள் சுனிதா வில்லியம்ஸ் விண்கலத்திலேயே தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோரை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் இன்று அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடற்பகுதியில் கேப்சூல் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
நேற்று காலை 10:30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டது. டிராகன் விண்கலத்திந் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹக் ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோர் ஆகியோர் சுமார் 17 மணிநேர பயணத்திற்கு பின் பூமியை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
