ஜேர்மனியின் புதிய சான்சிலரானார் Friedrich Merz!

ஜேர்மனியின் புதிய சான்சிலராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரீடிரிச் மேர்ஸ் (Friedrich Merz) அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெறவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வியடைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சிஎஸ்யு/சிடியு அணி வெற்றி பெற்றுள்ளது.

ஜேர்மனியின் புதிய சான்சிலராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரீடிரிச் மேர்ஸ் (Friedrich Merz) கூறுகையில், அமெரிக்கா ஐரோப்பிய கண்டத்தின் தலைவிதி குறித்து பெருமளவிற்கு அலட்சியமாக உள்ளது என தெரிவித்துள்ள ஜேர்மனியின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் (Friedrich Merz) , ஐரோப்பா சுதந்திரமாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் தேர்தலில் அமெரிக்காவின் தலையீட்டையும் அவர் கண்டித்துளார். ஐரோப்பாவை வலுப்படுத்துவதே எனது மிகவும் முன்னுரிமைக்குரிய விடயம் எனதெரிவித்துள்ள அவர், இதனை கூடியவிரைவில் செய்யவேண்டும், அமெரிக்காவிடமிருந்து படிப்படியாக நாங்கள் சுதந்திரத்தை பெறலாம் என குறிப்பிட்டுள்ளார்.

நான் இப்படி ஒரு கருத்தை தொலைக்காட்சிகளிற்கு தெரிவிக்கவேண்டிய நிலைவரும்,என ஒருபோதும் நினைக்கவில்லை என தெரிவித்துள்ள மேர்ஸ் (Friedrich Merz) கடந்த வாரம் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கள் அமெரிக்கா அல்லது அதன் தற்போதைய நிர்வாகம், ஐரோப்பாவின் தலைவிதி குறித்து அலட்சியமாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மன் தேர்தலில் பிரீடிரிச் மேர்ஸின் (Friedrich Merz) கென்சவேர்ட்டிவ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. அதேவேளை தீவிரவலதுசாரி கட்சியான ஏஎவ்டி ( அல்டனேர்ட் ஜேர்மன் கட்சி) 20.8 வீதவாக்குகள் கிடைத்தள்ளன.

பழையபாணி கென்சவேர்ட்டிவும் . இதுவரை அரசபதவிகளை வகிக்காதவருமான மேர்ஸ் (Friedrich Merz) , ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்திற்கும் அதிக சனத்தொகை கொண்ட நாட்டிற்கும் தலைமைதாங்கவுள்ளார். அதே வேளை , டிரம்ப் நிர்வாகமும் எலொன் மஸ்க்கும் ஜேர்மனியின் அதிதீவிர வலதுசாரிகளிற்கு ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *