2023 மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் என்ற வகையில் ஜனாதிபதியும், நிதியமைச்சரும் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று (22) தீர்ப்பளித்துள்ளது.
அதேவேளை, ,உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.