செம்மணிபடுகொலையின் 27ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். செம்மணி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருசாந்தி உள்ளிட்டவர்களை நினைவு கூர்ந்து ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.