சர்வஜன அதிகாரம் கூட்டணியின் ( சா்வஜன பலய) வேட்பாளராக பிரபல தொழிலதிபர் திலீத் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கபட்டுள்ளது.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்று வரும் சர்வஜன அதிகாரம் கூட்டணியின் மாநாட்டியே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஊழல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை வீழ்ச்சிப்பாதையில் இருந்து கட்டியெழுப்பி நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்வதே எமது நோக்கமாகும்” என திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.