2014 ஆம் ஆண்டு பொரளை பகுதியில் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட எஸ்.எஃப் சரத் என அழைக்கப்படும் கே.எம் சரத் பண்டாரவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
இந்த வழக்கில் ஏனைய பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்த தெமட்டகொட சமிந்த என அழைக்கப்படும் சமிந்த ரவி ஜயநாத் உட்பட மூன்று பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2014 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1 ஆம் திகதி பொரளை வனாத்தமுல்ல பகுதியில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் ஹெட்டியாராச்சிகே துமிந்த என்ற நபரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த நான்கு பிரதிவாதிகளுக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.