இன்று வெள்ளிக்கிழமை (04) பூஸா சிறைச்சாலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கைதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
46 வயதுடைய கைதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றுமொரு கைதியால் இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட கைதியின் உடலில் 11 வெட்டு காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.