தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் இடையிலான கூட்டணி ஒப்பந்தம் மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று (22) கைசாத்திடப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு இடையில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில், இரு கட்சிகளையும் சேர்ந்த முக்கிய சில உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
