ஏப்ரல் 15, 16, 17 ஆம் திகதிகளில் நண்பகல் 12.00 மணி வரை மாத்திரமே ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளைப் பெறுவதற்கான டோக்கன் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.
அத்துடன், தற்போது நடைமுறையிலுள்ள 24 மணி நேர ஒருநாள் சேவையானது ஏப்ரல் 15 – 17 வரை இடம்பெறாது எனவும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், சிங்கள புதுவருடத்தை தொடர்ந்து தங்களது சொந்த இடங்களுக்குச் செல்லும் ஊழியர்களின் விடுமுறை காரணமாக, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.