மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து இதற்கு காரணமானவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதேச செயலகத்தின் முன்னாள் உத்தியோகத்தர்கள் நேற்று(23) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 20 ஆம் திகதி கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் கிராம உத்தியோகத்தர் கடமை நிமித்தம் தனது பிரதேசததிற்கு சென்று வரும் போது சில நபர்களினால் தாக்கப்பட்டடையடுத்து அவர் காயமடைந்த நிலையில் வைத்தியச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை பொலிஸார் கைது செய்யவில்லை இந்த தாக்குதலை கண்டித்தும் பொலிஸார் சட்டநடவடிக்கை எடுக்குமாறு கோரி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகத்தின் முன்னாள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.