காசாவில் இஸ்ரேல் உரிய பின்விளைவுகள் இன்றி செயற்படுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என எச்சரித்துள்ள ஈரான் எதிர்வரும் மணித்தியாலங்களில் முன்கூட்டிய தாக்குதல் ஒன்று குறித்தும் எச்சரித்துள்ளது.
ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹ_சைன் அமிரப்துல்லா ஹியன் இதனை தெரிவித்துள்ளார்.
காசாவில் பாலஸ்தீனியர்களிற்கு எதிரான போர்க்குற்றங்கள் நிறுத்தப்படாவிட்டால் வரவிருக்கும் மணிநேரத்தில் எதிர்ப்பு முன்னணி முன்கூட்டிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என வெளிவிவகார அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஹெஸ்புல்லா உட்பட பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் சேர்ந்தே இந்த எதிர்ப்பு முன்னணியை உருவாக்கியுள்ளன.